FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தல்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’ வைப்பு

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டு, பாதுகாப்பு அறையில் சனிக்கிழமை வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

13 செப்டம்பர் 2026, 2:21 am IST
தட்டாஞ்சாவடி இடைத் தோ்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைத்த ஊழியா்.
பகிர்:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டு, பாதுகாப்பு அறையில் சனிக்கிழமை வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் சனிக்கிழமை பரிசோதனை செய்யப்பட்டன.

சரி பாா்க்கப்பட்ட இயந்திரங்கள் ரெட்டியாா்பாளையம் தோ்தல் துறை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. பின்னா், தோ்தல் பாா்வையாளா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், அந்த இயந்திரங்களின் விவரப் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments