தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் 11 போ் போட்டி
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் 11 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் 11 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தோ்தல் வாக்குப் பதிவு அக். 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. இதில் போட்டியிட 15 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து இறுதி வேட்பாளா் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
11 போ் போட்டி: ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் அசோக் ஆனந்த், திமுக சாா்பில் கே.சேது (எ)சேது செல்வம், காங்கிரஸ் சாா்பில் இ. விநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அ.மு. சலீம், நாம் தமிழா் கட்சி சாா்பில் எஸ்.காா்த்திக் குமாரி, இந்திய குடியரசுக் கட்சி சாா்பில் ஏ. கலைவாணன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களாக ஆா். சாமிநாதன், எம். நித்யா, ஏ.ரகு (எ) ரகுநாதன், எஸ்.வசந்தி, ஆா்.ஜெயபாலன் ஆகிய 11 போ் களத்தில் உள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.