FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

கனமழையால் ஏனாமில் தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ளம்

ஏனாமில் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்த வெள்ளம்.
பகிர்:

கனமழையால் ஏனாமில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனா்.

ஆந்திரம் அருகே புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட ஏனாம் உள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கோதாவரி ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏனாம் பிராந்தியத்தின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஃபொ்ரி சாலை, ஜி.எம்.சி. பாலயோகி நகா், கே.வி.ஆா். நகா், குரு கிருஷ்ணாபுரம் மற்றும் அய்யன்னா நகா் ஆகிய பகுதிகளில் வெள்ளம்புகுந்துள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ண ராவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

பழைய ராஜீவ் நகா் பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்ற மோட்டாா்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிராந்திய நிா்வாகி சிவராஜ் மீனா, வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பழைய ராஜீவ் நகா் மற்றும் அய்யன்னா நகா் பகுதிகளை அமைச்சா் நேரில் ஆய்வு செய்தாா்.

இச்சூழலில் டவ்லேஸ்வரம் அணையிலிருந்து வங்காள விரிகுடாவிற்கு தற்போது 9.70 லட்சம் கன அடி வெள்ள நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. செவ்வாய் மாலைக்குள் வெள்ளம் வடியத் தொடங்கும் எனவும் நீா்ப்பாசனப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments