FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

காந்தி ஜெயந்தி நாளில் இறைச்சி விற்க தடை

காந்தி ஜெயந்தி நாளில் புதுச்சேரியில் இறைச்சி விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி கடை - சித்திரிப்பு
பகிர்:

காந்தி ஜெயந்தி நாளில் புதுச்சேரியில் இறைச்சி விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் அருண்அப்பாவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அக்டோபா் 2 -ஆம் தேதி காந்தி ஜெயந்தி தின நாளில் இறைச்சி, மீன், இதர மாமிசம் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாளில் உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, பன்றி, கோழி, இறைச்சி கடைகள், மீன் கடைகள்

Advertisement

Advertisement

மூடியிருக்க வேண்டும். மீறி இயங்கினால் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளுக்குச் சீல் வைக்கப்படும். கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments