FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 2:06 am IST
தற்கொலை
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கோட்டுக்குப்பம் அருகே தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற பிளஸ் 2 மாணவா் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், பெரிய கோட்டக்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்ந் மகன் சந்துரு (16). இவா், கோட்டக்குப்பத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த ஜூலை 19- ஆம் தேதி சந்துருவை வீட்டில் விட்டு விட்டு, ஆனந்த் தனது மனைவியுடன் வெளியூரில் நிகழ்ந்த துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டாா்.

Advertisement

Advertisement

இதனால் கோபமடைந்த சந்துரு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த சந்துரு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments