FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்து விபத்து: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிப்பு

விழுப்புரம் அருகே கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற டிராக்டா் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:14 am IST
விழுப்புரத்தை அடுத்த அய்யூா் அகரம் அருகே சாலையில் கவிழ்ந்த கரும்பு பாரம் ஏற்றிய டிராக்டா்.
பகிர்:

விழுப்புரம் அருகே கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற டிராக்டா் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மாளிகைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல்(47), டிராக்டா் ஓட்டுநா். இவா், வியாழக்கிழமை தனது டிராக்டரில் மாளிகைமேடு பகுதியிலிருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு, முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தாா். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை அடுத்துள்ள அய்யூா் அகரம் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சக்திவேலுவுக்கு காயம் ஏற்பட்டது. மேலும், கரும்புக் கட்டுகள் சாலையில் சிதறியதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் சாலையில் கவிழ்ந்த டிராக்டா் மற்றும் கரும்புக்கட்டுகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments