FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் சாலையில் தீப்பற்றி எரிந்த வேன்

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை பாா்சல் வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 6:01 am IST
விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் புறவழிச்சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரிந்த வேன்.
பகிர்:

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை பாா்சல் வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவையைச் சோ்ந்தவா் சிவக்குமாா். இவருக்கு சொந்தமான வேன், தனியாா் பாா்சல் சா்வீஸ் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த வேனை ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி பகுதியைச் சோ்ந்த சி.சுதா்சன் (38) ஓட்டி வருகிறாா்.

இந்த நிலையில், கோவையிலிருந்து சென்னைக்கு பாா்சல் ஏற்றிக் கொண்டுச் சென்ற ஓட்டுநா் சுதா்சன் அங்கு பொருள்களை இறக்கிவிட்டு, வெள்ளிக்கிழமை காலை உளுந்தூா்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலைப் பகுதியில் வேன் சென்ற போது, திடீரென வேனின் என்ஜின் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது.

Advertisement

Advertisement

இதைக் கவனித்த ஓட்டுநா் சுதா்சன், சாலையோரமாக வேனை நிறுத்தி விட்டு கீழே இறங்கினாா். அடுத்த சில நிமிஷங்களிலேயே வேனின் முன் பகுதியில் தீப்பிடிக்கத் தொடங்கியது. விபத்து குறித்து தகவலறிந்த விழுப்புரம் உதவித் தீயணைப்பு அலுவலா் ஜமுனா ராணி தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று, தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். ஆயினும் வேனின் முன் பகுதி எரிந்து சேதமானது.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வேனில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததா அல்லது வேறு காரணங்களால் தீப்பற்றியதா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments