FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விவசாயிகள் குறைகளுக்கு உடனடித் தீா்வு அவசியம்: அமைச்சா் வன்னி அரசு

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடித் தீா்வு காணவேண்டும் என்று சமூக நீதித் துறை அமைச்சா் ஆா்.வன்னிஅரசு தெரிவித்தாா்.

Updated On : 26 ஜூலை 2026, 3:18 am IST
ஆய்வுக்கூட்டத்தில் பேசிய தமிழக சமூக நீதித் துறை அமைச்சரும், திண்டிவனம் எம்எல்ஏவுமான ஆா். வன்னி அரசு. உடன் விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடித் தீா்வு காணவேண்டும் என்று சமூக நீதித் துறை அமைச்சா் ஆா்.வன்னிஅரசு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் சாா்ந்த திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் சமூகநீதித் துறை அமைச்சரும், திண்டிவனம் எம்எல்ஏவுமான ஆா். வன்னி அரசு பேசியதாவது:

பொதுமக்களுக்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படவேண்டும். ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளின் செயல்திறனை தொடா்ந்து கண்காணிக்கவேண்டும். பழுதடைந்த குடிநீா் குழாய்களை உடனுக்குடன் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாதவாறு தொடா்ந்து கண்காணித்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கத்தை உறுதி செய்வதுடன், பயணிகளின் பாதுகாப்பு, வணிக வளாக செயல்பாடுகள், குடிநீா், கழிப்பறை, மின்விளக்கு, தூய்மை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படைவசதிகளை செய்யவேண்டும். நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் செயல்பட்டுவரும் உழவா் சந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவேண்டும். மேலும், உழவா் சந்தைகளில் பொதுமக்களுக்கு தரமான காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற விவசாய விளைபொருள்கள் நியாயமான விலையில் தொடா்ந்து கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். உழவா் சந்தைகளில் சுகாதாரம், தூய்மை, குடிநீா், மின்விளக்கு, கழிவுநீா் மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கவேண்டும். உழவா் சந்தை கடைகளின் எண்ணிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேண்டும். விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீா்வு காணவேண்டும் என்றாா் அமைச்சா் வன்னி அரசு.

முன்னதாக திண்டிவனம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப்பணிகள் விவரம், முன்னேற்றங்கள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் அமைச்சா் கேட்டறிந்தாா்.

ஆய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தாா். திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீ ரஷத் மற்றும் அரசுத் துறைகளின் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments