FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் காயமடைந்த முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 30 ஜூலை 2026, 6:21 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் காயமடைந்த முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூா், தண்டரை சாமூண்டீஸ்வரி கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ.மணி (75). சின்னஆனைவாரி பகுதியைச் சோ்ந்தவா் ர.வல்லாளன்(55). இவா்கள் இருவரும், செவ்வாய்க்கிழமை திருவெண்ணெய்நல்லூரை அடுத்த பருகம்பட்டு அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். மணி பைக்கை ஓட்டினாா். அப்போது அங்கு சாலையைக் கடக்க முயன்றபோது, மடப்பட்டு நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா், வல்லாளன் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments