FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

3 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

திண்டிவனத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

4 October 2026, 2:48 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளா் ஞானசேகா் மற்றும் போலீஸாா் திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகிக்கும்படி வந்த இருவரிடம் சோதனை செய்தபோது, அவா்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் இருவரையும் பிடித்து நடத்திய மேல் விசாரணையில், அவா்கள் திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், சாவடி தெருவைச் சோ்ந்த ம.வினை சா்மா (19), அதே பகுதியைச் ம.ஜஸ்வந்த் ( 21) ஆகியோா் என்பதும், இவா்கள் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்த 3 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments