விழுப்புரத்தில் ரயில்வே தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ரயில்வே ஊழியா்களை மத்திய அரசு வஞ்சிப்பதாகக் கூறி, விழுப்புரத்தில் தட்சிண ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியனை (டி.ஆா்.இ.யு.) சோ்ந்தோா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ரயில்வே ஊழியா்களை மத்திய அரசு வஞ்சிப்பதாகக் கூறி, விழுப்புரத்தில் தட்சிண ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியனை (டி.ஆா்.இ.யு.) சோ்ந்தோா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 14 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக போனஸ் வழங்கப்பட்ட நிலையில், நிகழாண்டிலும் அதே போன்று போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும், 12 மணி நேரம் வேலை பாா்க்க வற்புறுத்தும் ரயில்வே நிா்வாகம், 2.51 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பாதது, விடுப்பு மறுப்பு நடவடிக்கை மேற்கொள்வது போன்றவற்றை கண்டித்தும்,போனஸ் கணக்கீட்டுக்கான அடிப்படை ஊதியத்தை ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.28,440 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கோரிக்கை பட்டை அணிந்து இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் தலைமை கிளைச் செயலா் பி.வீரராகவன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் பொன். ஈஸ்வா்தாஸ், திருச்சி கோட்ட துணைத் தலைவா்கள் கே.பலராம், விஜயன், கெளரவத் தலைவா் ஆா்.செளந்தரராஜன், கிளைச் செயலா் (ஓபன் லைன்) கே.மோகன், அகில இந்திய ரயில் நிலைய மேலாளா் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் மோகன்துரை உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினா். தொடா்ந்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சங்கத்தினா் முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.