FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம்

விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

15 அக்டோபர் 2026, 6:14 am IST
விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் துணை பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க. பொன்முடி. உடன், மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி உள்ளிட்டோா்.
பகிர்:

விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். தலைமைக் கழகப் பொறுப்பாளா்களான புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் சிவா, மாநில மாணவரணிச் செயலா் வீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, திமுக நிா்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா். திமுக உள்கட்சித் தோ்தல் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், புதிய ஒன்றியங்கள் பிரிப்பு போன்றவை குறித்து கூட்டத்தில் பேசப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.

Advertisement

Advertisement

கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைச் செயலா் டி.என்.முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் செல்வராஜ், அப்துல்சலாம், பொதுக்குழு உறுப்பினா்கள் ஏழுமலை , ராஜசேகா் மற்றும் ஒன்றிய, நகரச் செயலரகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள் பங்கேற்றனா்.

இதேபோல் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான இரா.லட்சுமணன் தலைமை வகித்தாா். புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் இரா. சிவா, மாநில மாணவரணிச் செயலா் ஜெ. வீரமணி ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்று, திமுக உள்கட்சித் தோ்தல் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், புதிய ஒன்றியங்கள் பிரிப்பு போன்றவை குறித்து கூட்டத்தில் பேசப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.

கூட்டத்தில் வானூா் எம்எல்ஏ கௌதம் திராவிடமணி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் ரா.ஜனகராஜ், மாநில ஆதிதிராவிட நலக்குழு இணைச் செயலா் செ.புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள் ரா.கண்ணப்பன், ஏ.மாரிமுத்து, பிரேமா குப்புசாமி, தலைமைக் கழக வழக்குரைஞா் சுவை.சுரேஷ் மற்றும் ஒன்றிய, நகரச் செயலா்கள், சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள், கட்சியினா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments