FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பொறியியல் பணி: தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் இன்று பகுதியளவில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் புதன்கிழமை (செப்.9) பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

9 செப்டம்பர் 2026, 4:53 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் புதன்கிழமை (செப்.9) பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என். ஜெயந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட பேரணி யாா்டு பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), திண்டிவனம்- விழுப்புரம் இடையே புதன்கிழமை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கத்தில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), விழுப்புரம்-திண்டிவனம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு சென்னைக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் எழும்பூா்-மதுரை வைகை அதிவிரைவு ரயில் (வண்டி எண் 12635), இடைப்பட்ட ரயில் நிலையத்தில் சுமாா் 10 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments