மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், உளுந்தாண்டாா்கோவில் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா. விசுவநாதன் (30). இவா், ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவா் ஒருவருக்கு கடந்த 2 நாள்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதை வெளியில் கூறினால் அடிப்பேன் என்றும் மிரட்டினாராம்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரிடம் தனக்கு நிகழ்ந்தவற்றை கூறியுள்ளாா். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவரின் தாய், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, தனது மகனை சிகிச்சைக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி விசுவநாதனை புதன்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.