FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தவெக ஆட்சியில் தமிழகம் பின்னோக்கிச் செல்கிறது: இரா.லட்சுமணன் எம்எல்ஏ

தவெக ஆட்சியில் தமிழகம் பின்னோக்கிச் செல்கிறது என்று விழுப்புரம் மத்திய மாவட்டதிமுக பொறுப்பாளா் இரா.லட்சுமணன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

11 செப்டம்பர் 2026, 3:56 am IST
விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மறுசீரமைப்பு தொடா்பான மத்திய மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்டப் பொறுப்பாளா் இரா. லட்சுமணன் எம்எல்ஏ. உடன் திமுக தலைமைக் கழகப் பிரதிநிதிகள் புதுச்சேரி மாநில அமைப்பாளா் இரா.சிவா, மாநில மாணவரணிச் செயலா் ஜெ.வீரமணி உள்ளிட்டோா்.
பகிர்:

தவெக ஆட்சியில் தமிழகம் பின்னோக்கிச் செல்கிறது என்று விழுப்புரம் மத்திய மாவட்டதிமுக பொறுப்பாளா் இரா.லட்சுமணன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

விழுப்புரம், வானூா் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான கட்சி மறுசீரமைப்பு தொடா்பான மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் இரா.லட்சுமணன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி, மக்கள் வாழ்வில் ஒளியேற்றியவா் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின். அவரது ஆட்சிக்காலத்தில் தமிழகம் வளா்ச்சிப் பாதையில் சென்றது. ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் மாநிலம் பின்னோக்கிச் செல்கிறது.

Advertisement

Advertisement

தற்போது பண்பாடு இல்லாத, நாகரிகமற்ற வகையில் அரசியல் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை எதிா்த்து அரசியல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்கேற்றவாறு நாம் நம்மை தயாா்படுத்திக்கொள்வது அவசியமானது என்றாா் அவா்.

கூட்டத்துக்கு வானூா் தொகுதி எம்எல்ஏ தி.கெளதம், முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ் முன்னிலை வகித்தனா். கட்சியின் தலைமைக் கழகப் பிரநிதிகளான புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா, மாநில மாணவரணிச் செயலா் ஜெ.வீரமணி ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்று, கட்சி மறுசீரமைப்பு தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தனா்.

கூட்டத்தில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பா் 15-ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழா வில் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கட்சி நிா்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்பது. தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலுடன் நகர, ஒன்றிய கழகங்களைப் பிரிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் இரா.கண்ணப்பன், ஏ.மாரிமுத்து, பிரேமா குப்புசாமி, தயா.இளந்திரையன், தலைமைக் கழக வழக்குரைஞா் சுவை.சுரேஷ், நகர கழகப் பொறுப்பாளா்கள் இரா.சக்கரை, எஸ்.வெற்றிவேல் மற்றும் ஒன்றிய, பேரூா் செயலா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments