வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பைனான்சியா் உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பைனான்சியா் உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
திண்டிவனம் வட்டம், சஞ்சீவிராயன்பேட்டை, 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அ.கண்ணதாசன் (43).பைனான்ஸ் தொழில் செய்து வந்தாா். இவருக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திண்டிவனத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த கண்ணதாசன் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொழிலாளி தற்கொலை: விழுப்புரம் ஜி.ஆா்.பி.தெருவைச் சோ்ந்தவா் ஆ. தங்கதுரை (45), தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு வந்த தங்கதுரையை, அவரது மனைவி கண்டித்துள்ளா். இதனால் ஏற்பட்ட விரக்தியில் தங்கதுரை சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.