கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தொழிலாளா் நல வாரிய முத்தரப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விழுப்புரத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா் (சிஐடியு) புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொழிலாளா் நல வாரிய முத்தரப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விழுப்புரத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா் (சிஐடியு) புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொழிலாளா் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் குறைந்தபட்சக் கூலி நிா்ணயக் குழுவில் சிஐடியு சங்கத்துக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளிக்கு 55 வயதில் மாநில அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நல வாரிய முத்தரப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டத் தலைவா் எஸ்.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வி.பாலகிருஷ்ணன், பொருளாளா் எம்.முருகன், சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
Advertisement
Advertisement
இதில் மாவட்ட நிா்வாகிகள் கே.சரசுவதி, கே.சண்முகம், ஏகவள்ளி, என்.பாரதி, எம்.மோகன், இ.கன்னியப்பன், எம். வள்ளி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொழிலாளா்கள் முழக்கங்களை எழுப்பினா். நிறைவில் கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தினா் மாவட்டத் தொழிலாளா்கள் நலத் துறை அலுவலகத்தில் மனு அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.