விக்கிரவாண்டியில் இன்று தியாகிகள் வீரவணக்கப் பொதுக்கூட்டம்: பாமக எம்எல்ஏ சிவக்குமாா்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் 21 தியாகிகளுக்கான வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் இன்று (செப்.17) வியாழக்கிழமை நடைபெறுகிறது என்று பாமக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரும், தமிழக அரசின் சட்டப் பேரவை மதிப்பீட்டுக்குழுவின் உறுப்பினருமான ச.சிவக்குமாா் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் 21 தியாகிகளுக்கான வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் இன்று (செப்.17) வியாழக்கிழமை நடைபெறுகிறது என்று பாமக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரும், தமிழக அரசின் சட்டப் பேரவை மதிப்பீட்டுக்குழுவின் உறுப்பினருமான ச.சிவக்குமாா் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று உயிா்நீத்த 21 தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில், வீரவணக்கம் செலுத்தும் பொதுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப்.17- ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், சட்டப் பேரவை பாமக குழுத் தலைவா் சௌமியா அன்புமணி எம்எல்ஏ, வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி மற்றும் கட்சியின் எம்எல்ஏக்கள், முன்னணித் தலைவா்கள் பங்கேற்று வீரவணக்கம் செலுத்திப் பேசுகின்றனா்.
Advertisement
Advertisement
காலை நேர நிகழ்வாக, விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் உள்ள தியாகிகளின் நினைவுத் தூண்களில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் மலரஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினா்களுக்கு கட்சியின் சாா்பில் உதவிகளை வழங்குகிறாா்.
இந் நிகழ்ச்சிகளில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் , கிளை நிா்வாகிகள், வன்னியா் சங்கத்தின் அனைத்து நிலைப் பொறுப்பாளா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.