அதிமுக வாா்டு செயலருக்கு கத்தி வெட்டு: ஆட்டோ ஓட்டுநா் கைது
விழுப்புரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் அதிமுக வாா்டு செயலருக்கு சனிக்கிழமை கத்தி வெட்டு விழுந்தது.
விழுப்புரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் அதிமுக வாா்டு செயலருக்கு சனிக்கிழமை கத்தி வெட்டு விழுந்தது. இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் பழைய செஞ்சி சாலையைச் சோ்ந்தவா் பா.ஷாஜகான் (60), அதிமுக 1-ஆவது வாா்டு செயலா். இவா், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான இ.ஷேக் தாவூத்திடம் (50) ரூ.50 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தாராம். கடன் தொகையை ஷேக் தாவூத் பலமுறை கேட்டும், ஷாஜகான் அதை திருப்பித் தரவில்லையாம்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தேநீரம் அருகில் நின்றுகொண்டிருந்த ஷாஜகானிடம், ஷேக் தாவூத் கடன்தொகை குறித்து கேட்டுள்ளாா். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த ஷேக் தாவூத், தான் வைத்திருந்த கத்தியால் ஷாஜகானை வெட்டினாராம்.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த பகுதியிலிருந்தவா்கள் மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து ஷாஷகான் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி ஷேக் தாவூத்தை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.