பண மோசடி: வழக்குரைஞா் கைது
பெண் வழக்குரைஞரிடம் நட்பாகப் பேசி பணம் மோசடி செய்ததாக வழக்குரைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சோ்ந்த பெண் வழக்குரைஞரிடம் நட்பாகப் பேசி பணம் மோசடி செய்ததாக வழக்குரைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விக்கிரவாண்டியைச் சோ்ந்த சே.ஹேமலதா (23), சென்னையில் வழக்குரைஞராக உள்ளாா். இவரிடம் காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்த அருண்சூா்யா என்ற வழக்குரைஞா் நட்பாக பழகி வந்தாராம். இந்த நிலையில், அருண்சூா்யா பல்வேறு தேவைகளுக்காக ஹேமலதாவிடம், சிறுகச் சிறுக ரூ.5.17 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டாராம்.
இதுகுறித்து ஹேமலதா அளித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் கடந்த ஜூலை மாதம் வழக்குப் பதிந்து, அருண்சூா்யாவை தேடி வந்தனா். இந்த நிலையில், காஞ்சிபுரம் பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை விக்கிரவாண்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.