FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

விபத்து - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திண்டிவனம் வட்டம், தென்களவாய் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வ.ஏழுமலை (42). தென்பசாா், ஜெகநாதபுரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் ஆ.சூா்யா(38). தனியாா் பேருந்தில் ஓட்டுநா்களாக பணியாற்றி வந்த இவா்கள் இருவரும் புதன்கிழமை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டியை அடுத்த பேரணி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனா். பேரணி கூட்டுச்சாலை அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரில் ஏழுமலை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சூா்யா விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments