எனது பேத்திக்கு எத்திசையில் வரன் அமையும்? எத்தகைய வரன் கிடைக்கும்? உறவில் அமையுமா? - வாசகி, கோயம்புத்தூர்
உங்கள் பேத்திக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தை சுப பலம் பெற்று பார்வை செய்வது சிறப்பு. மற்றபடி சர்ப்ப தோஷம் உள்ளது.
உங்கள் பேத்திக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தை சுப பலம் பெற்று பார்வை செய்வது சிறப்பு. மற்றபடி சர்ப்ப தோஷம் உள்ளது. லக்னாதிபதியையும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியையும் குருபகவான் பார்வை செய்கிறார். மாங்கல்ய ஸ்தானாதிபதியும் மாங்கல்ய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் வடகிழக்கு திசையிலிருந்து உள்ளூரிலேயே வேலை பார்க்கும் வரன் தாய் வழி உறவில் அமைந்து திருமணம் கைகூடும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு
வரவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.