என் மகன் மருத்துவப் படிப்பு படிக்க விரும்புகிறான். விருப்பம் நிறைவேறுமா? திருமணம் எப்போது நடைபெறும்? வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டா? - வாசகர், மதுரை
உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மகர ராசி. கல்வி ஸ்தானத்தில் கல்வி ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் ஆட்சி பெற்றும் கல்வி காரகரான புதபகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றும் இருக்கிறார்.
உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மகர ராசி. கல்வி ஸ்தானத்தில் கல்வி ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் ஆட்சி பெற்றும் கல்வி காரகரான புதபகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றும் இருக்கிறார். லக்னாதிபதி தொழில் ஸ்தானத்தில் திக் பலம் பெற்று பூர்வபுண்ணியாதிபதி மற்றும் நட்பு ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் ஏழரை நாட்டுச் சனி முதல் சுற்று ஆரம்பித்துள்ளது. சனிபகவான் லக்ன சுபர்களுடன் இணைந்திருப்பதால் இதுவும் சீராகவே செல்லும். சிவராஜயோகம், குருமங்கள யோகம்,அஷ்டமஹா நாக யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்புகள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே அமையும். 24 -ஆம் வயத்துக்குப்பிறகு உறவில் பெண் அமைந்து திருமணம் கைகூடும். பெற்றோருக்கு இறுதிவரை ஆதரவாக இருப்பார். வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டு. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு
வரவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.