FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அனுஷ்காவைப் பற்றி காமெடி நடிகர் ஜெகனின் அத்துமீறல் கமெண்ட்!

இது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. அனுஷ்காவைப் பற்றிய ஜெகனின் இந்த கமெண்ட் இங்கிதமற்றது மட்டுமல்ல கொஞ்சம் கூட மேடை நாகரீகம் அற்றது!

Updated On : 28 ஜூன் 2017, 2:08 pm IST
பகிர்:

NAC ஜூவல்லர்ஸ் தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ள மாபெரும் நகைக்கடை என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடும். சரவண ஸ்டோர்ஸ், ஆச்சி மசாலா நிறுவனம், லலிதா ஜூவல்லரி உள்ளிட்ட நிறுவனங்களின் முதலாளிகள் தங்களது பிராண்டுகளை விளம்பரப் படுத்த நடிகர்களை அணுகாமல் தாங்களே தங்களது விளம்பரங்களில் தோன்றி நடிப்பதைக் கண்ட இன்ஸ்பிரேஷனாலோ அல்லது சுய விருப்பத்தாலோ NAC காரர்களும் திரைத்துறையில் அடியெடுத்து வைத்துள்ளனர். ஆனால் அவர்களைப் போல இவர்கள் திரையில் முகம் காட்டப் போவதில்லையாம். திரைக்குப் பின்னான வேலைகள் அனைத்தையும் முடித்துத் தரக்கூடிய வகையில் சுமார் 15,000 சதுர அடி பரப்பளவில் ஆடியோ ஸ்டுடியோ, வீடியோ ஸ்டுடியோ உள்ளிட்ட போஸ்ட் புரொடக்சன் ஸ்டுடியோ ஒன்றை லாஞ்ச் செய்துள்ளனர்.

இதற்கான மேடை நிகழ்வொன்றை ஹோஸ்ட் செய்தது தொகுப்பாளரும், காமெடி நடிகருமான ஜெகன். நிகழ்வில் மேடையில் வைத்து NAC நிறுவனத் தலைவர் புகைப்படக்காரர்களைப் பற்றிய தனது சிறு மனக்குறை ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். அதாவது, “அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த ருத்ரம்மா தேவி திரைப்படத்தை எங்களது  கடையில் தான் லாஞ்ச் செய்தோம், அதில் அனுஷ்கா வருவதற்கு 1/2 மணி நேரம் முன்பாக ஃபுல்ஷூட்டில் நான் கலந்து கொண்டேன்; ஆனால் புகைப்படக்காரர் ஒருவர் கூட என்னைக் கண்டுகொள்ளவில்லை. அதே அனுஷ்கா வந்ததும் உடனடியாக அனைத்துப் புகைப்படக் காரர்களும் கீழே விழாத குறையாக மேலும், கீழுமாக விதம் விதமாகப் புகைப்படங்களாக எடுத்துக் குவித்தார்கள்...” என்றார். இதற்கு ஜெகன் அளித்த பதில் அனுஷ்காவை மட்டுமல்ல மொத்த நடிகைகளையும் கேவலப் படுத்தும் விதமாக இருந்தது.

“சார்... நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்... அனுஷ்கா எப்படி வந்தாங்க? அவங்க ரொம்பக் கம்மியா போட்டுனு வந்துருப்பாங்க, நீங்க ஃபுல்லா வந்திருக்கீங்க”

Advertisement

Advertisement

ஜெகனின் கமெண்ட்டை மறுக்கும் விதமாக NAC ஓனர் சிரித்துக் கொண்டே மீண்டும் “எங்க கடைக்கு அவங்க அப்படி வரலை "என்கிறார்.

அப்படியும் சமாதானமாகாத ஜெகன்;

“சார்... நீங்க இந்த இண்டஸ்ட்ரிக்குப் புதுசு... எங்க போனாலும் சரி, நான் சூர்யாவுடன் நடித்திருக்கிறேன், தனுஷுடன் நடித்திருக்கிறேன்... ஆடியோ லாஞ்ச்சில் ஹீரோ உட்பட எல்லோரும் இருப்பார்கள். ஆனால் ஹீரோயின் வந்தவுடன் எல்லோரும் ஓடிப்போய் அவர்களைத் தான் புகைப்படம் எடுப்பார்கள்... அது நம் எல்லோருக்கும் தெரியும்... என் நண்பர்கள் எல்லோருக்கும் கூடத் தெரியும், அவர்களும் இதை ஒத்துக் கொள்வார்கள். நீங்கள் புதிதாக சினிமா இண்டஸ்ட்ரிக்குள் வந்திருப்பதால் உங்களுக்கு அது தெரியவில்லை. அனுஷ்காவை விட்டு விட்டு உங்களைப் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில் அதற்கு சில ட்ரிக்ஸ் இருக்கிறது. அதை நான் தனியாக உங்களுக்கு கற்றுத் தருகிறேன்” என்கிறார்.

ஒரு தொகுப்பாளர், ஒரு சில திரைப்படங்களில் ஹீரோக்களுடன் காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்த ஊரறிந்த பிரபலம் ஒருவர் ஒரு மேடை நிகழ்வில், சினிமாத் துறை சார்ந்தும், வர்த்தகத்துறை சார்ந்தும் விருந்தினர்கள் நிறைந்திருந்த ஒரு அவையில் சக நடிகை ஒருவரைப் பற்றி; “அனுஷ்கா கம்மியா போட்டுனு வந்துருப்பாங்க” என்று கூச்சமின்றி கமெண்ட் அடித்தது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. அனுஷ்காவைப் பற்றிய ஜெகனின் இந்த கமெண்ட் இங்கிதமற்றது மட்டுமல்ல கொஞ்சம் கூட மேடை நாகரீகம் அற்றதும் கூட! இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல அவர் நடத்தும் ‘கனெக்‌ஷன்’ நிகழ்ச்சியிலும் கூட பங்கேற்பாளர்களை விசமத் தனமான கமெண்டுகளுடன் தான் ஜெகன் கையாள்கிறார். இதுவரை இதை எதிர்த்து ஒருவர் கூட தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. 

ஜெகன் அனுஷ்காவைப் பற்றி அநாகரீகமாக கமெண்ட் அடித்த வீடியோ ஆதாரம் தேவைப்படுபவர்கள்... கீழுள்ள யூ டியூப் லிங்கை அழுத்திக் காணலாம்.

சூர்யாவுடனும், தனுஷுடனும் சில படங்களில் சேர்ந்து நடித்து விட்டால் போதுமா? ஒட்டுமொத்த நடிகைகளையும் ஆபாசமாகப் பகடி செய்கிற தைரியம் வந்து விடுமா? என்ன விதமான மனநிலை இது? ஜெகனின் இது போன்ற கமெண்டுகள் நிச்சயம் கண்டனத்துக்குரியவை மட்டுமல்ல கண்டிக்கத் தக்கவையும் கூட!

Image & video courtsy: india glitz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments