FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சுதா கொங்கரா இயக்கிய இறுதிச் சுற்று திரைப்படத்துக்குக் கிடைத்த புதிய விருது!

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் – ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி பரவலான

Updated On : 8 செப்டம்பர் 2017, 4:21 pm IST
பகிர்:

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் – ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்ற `இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்கு புதுவை சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்படுகிறது.

புதுவை அரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறந்த படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு (2016) சிறந்த திரைப்படமாக சுதா கொங்கரா இயக்கிய `இறுதிச்சுற்று’தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விருது வழங்கும் விழா மற்றும் இந்திய திரைப்பட விழாவின் தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு புதுவை அலையன்ஸ் பிரான்சஸ் அரங்கில் நடக்கிறது.

புதுவை அரசின் செய்தி விளம்பர துறை, நவதர்‌ஷன் திரைப்பட கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆகியோர் இணைந்து நடத்தும் இத்திரைப்பட விழா இன்று (செப்டம்பர் 8) தொடங்கி 12-ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கும். விழாவினை முதலமைச்சர் நாராயண சாமி தொடக்கி வைத்து இயக்குனர் சுதா கொங்கராவுக்கு சிறந்த திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை வழங்குகிறார்.

Advertisement

Advertisement

விழாவை தொடர்ந்து `இறுதிச்சுற்று’ திரைப்படம் திரையிடப்படும். மேலும் இவ்விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு அலையன்ஸ் பிரான்சஸ் அரங்கில் பொதுமக்கள் பார்வையிடலுக்காக இலவசமாக பன்மொழிப் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அதன் விபரங்கள் -

செப்டம்பர் 9 (சனிக்கிழமை) - சித்ரோகர் (பெங்காலி) 
செப்டம்பர் 10 (ஞாயிற்றுக்கிழமை) - காடு பூக்குன்ன நேரம் (மலையாளம்)
செப்டம்பர் 11 (திங்கள் கிழமை) - ஏர்லிப்ட் (இந்தி) 
செப்டம்பர் 12 )செய்வாய்க் கிழமை) - யூ-டர்ன் (கன்னடம்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments