கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'மகான்’
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படத்திற்கு மகான் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படத்திற்கு மகான் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் சீயான் விக்ரமின் 60ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இதையும் படிக்க | ஒரே படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் - சூர்யா ?
Advertisement
Advertisement
மகான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க நடிகர் விக்ரம் நடிக்கிறார். லலித்குமார் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
டாக்ஸிவாலா நாயகி பிரியங்கா ஜவல்கர் போட்டோஷூட் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
மேலும் நடிகர்கள் சிம்ரன், பாபி சிம்ஹா மற்றும் துருவ் விக்ரம், வாணிபோஜன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.