FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் முடியப்போகிறதா ? - நடிகை பதில்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடியப்போகிறதா என்ற கேள்விக்கு நடிகை ஹேமாராஜ் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக பதிலளித்துள்ளார்.

Updated On : 31 ஜூலை 2021, 12:43 pm IST
பகிர்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடியப்போகிறதா? என்ற கேள்விக்கு நடிகை ஹேமாராஜ் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக பதிலளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்தத் தொடரில் முல்லை என்ற வேடத்தில் முதலில் நடிகை சித்ரா நடித்துவந்தார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிகை சித்ராவின் நடிப்பும், அந்த கதாப்பாத்திரமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக கடந்த வருடம் அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரானது, நான்கு அண்ணன், தம்பிகள் தங்களது மனைவிகளுடன் கூட்டுக்குடும்பமாக வசிக்கும்போது அவர்களுக்குள் நிகழும் உறவு சிக்கல்களை பேசியிருக்கிறது. ஆனந்தம், சமுத்திரம் போன்ற திரைப்படங்கள் இதே போன்ற கதையம்சத்துடன் வெளியாகியிருந்தாலும், இந்த தொடர் தினமும் ஏதாவதொரு சுவாரசியத் திருப்பங்களுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. 

இந்த நிலையில் இந்தத் தொடரில் மீனா என்ற வேடத்தில் நடித்துவரும் ஹேமாராஜ் சதீஷ் என்ற நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ரசிகர் ஒருவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடியப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. அந்த செய்தி உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு பதிலளித்த நடிகை ஹேமா, அந்த தகவல் உண்மை என்றால், எனக்கு இந்நேரம் தகவல் வந்திருக்கும். அதனால் அந்த செய்தி பொய்யானது என்று தெரிவித்தார். இந்தத் தகவல் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments