நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து அவரது மனைவி லதா ரரஜினிகாந்த் கூறியுள்ளதாவது, ''ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை அவருக்கு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அதன்படி முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவர் விரைவில் வீடு திரும்புவார்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக தில்லியில் சமீபத்தில் நடைபெற்ற 67வது திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், நடிகர் ரஜினிகாந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.