அஸ்வின் குமாரை நம்பும் பிரபு சாலமன்: 'செம்பி' 2வது டிரெய்லர் வெளியீடு!
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள செம்பி படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’செம்பி’ படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அஸ்வின் குமார் இதில் நாயகனாக நடிக்க, கோவை சரளா, தம்பி ராமையா, நிலா என்ற சிறுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படிக்க | இயக்குநர் அட்லி வீட்டில் விசேஷம்!
Advertisement
Advertisement
பிரபு சாலமன் படங்களுக்கு டி.இமான் வழக்கமாக இசையமைத்து வந்த நிலையில், செம்பி படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
சென்பி படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியதோடு பாடல்களையும் பிரபு சாலமன் எழுதியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அஸ்வின் குமாரை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து படத்தை எடுத்துள்ளார்.
'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் நிகழ்ச்சியில் அஸ்வின் குமார் பேசியது பலவிமர்சனங்களுக்கு உள்ளானது. அதனைத் தொடர்ந்து அவரின் மார்க்கெட் குறையத் தொடங்கியது என்றே கூறலாம். எனினும் கதைக்கு பொருத்தமானவர்களை நடிக்க வைப்பதில் கைதேர்ந்தவரான பிரபுசாலமன் தற்போது அஸ்வினை நம்பி செம்பி படத்தில் களமிறக்கியுள்ளார்.
இந்த படத்தின் முதல் டிரெய்லர் ஜூன் மாதம் வெளியானது. தற்போது இரண்டாவது டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.