FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காவலர் முணுமுணுக்கும் ‘ஜெய் பீம்’ பாடல்: இசையமைப்பாளர் நெகிழ்ச்சி ட்வீட்

சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தின் பாடலுக்கு காவலர் ஒருவர் மெய்மறந்து முணுமுணுக்கும் விடியோ வைரலாகி வருகிறது. 

Updated On : 17 டிசம்பர் 2022, 3:47 pm IST
பகிர்:

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவான ஜெய் பீம் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து நடித்திருந்த இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், குரு சோமசுந்தரம், ரஜிஷா விஜயன், எம்.எஸ். பாஸ்கர், குமாரவேல், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

எஸ்.ஆர்.கதிர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இந்தப் படம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். சமூகத்தில் பெரிய தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்தப்படம் பல்வேறு விருதுகளையும்  வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஜெய் பீம் படத்தில் வரும் ‘பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே..’ என்ற பாடலுக்கு காவலர் ஒருவர் மெய்மறந்து முணுமுணுக்கும் விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இது போதும்” என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் நெகிழ்ச்சியாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments