FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வாரிசு 3வது பாடல் குறித்து அறிவிப்பு: அம்மா சென்டிமென்ட் பாடலா?

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் வாரிசு படத்தின் 3வது பாடல் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. 

Updated On : 19 டிசம்பர் 2022, 6:14 pm IST
பகிர்:

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். குஷ்பு, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். முதல் பாடல் ரஞ்சிதமே 99 மில்லியன் (9.9 கோடி) பார்வையாளர்களையும், இரண்டாவது பாடல் ‘தீ தளபதி’ 25 மில்லியன் (2.5 கோடி) பார்வையாளர்களையும் யூடியூபில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் 3வது பாடல் நாளை (டிச.20) மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இந்தப் பாடல் அம்மாவுக்காக என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவேக் எழுதிய இந்தப்பாடலை பிரபல பாடகி சித்ரா பாடி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட நாட்களுக்குப் பிறகு அம்மா சென்டிமென்ட் பாடலில் விஜய் நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பினால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments