துணிவு படத்திற்கு வானத்தில் வேற லெவல் புரமோஷன்!
நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு படத்தின் புதிய புரமோஷன் விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க: அஜித்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல் புதிய சாதனை: இமான் நெகிழ்ச்சி ட்வீட்!
Advertisement
Advertisement
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா..சில்லா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான ‘காசேதான் கடவுளடா’ பாடலும், கேங்ஸ்டா பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இந்நிலையில் லைகா நிறுவனம் வெளிநாடுகளில் வேற லெவல் புரமோஷனை செய்து வருகிறது. வானத்தில் ஸ்கை டைவிங் செய்து கொண்டு துணிவு படத்தின் அப்டேட் டிச.31 அன்று வெளியாகுமென புதிய புரமோஷன் விடியோவை வெளியிட்டுள்ளனர்.
அஜித் ரசிகர்கள் இந்த விடியோவினை பகிர்ந்து வேற லெவல் அப்டேட் என இணையத்தில் வைரலாக்குகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.