FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

‘இதுதான் உண்மையான காதல்’- ரிஷப் பந்த் குறித்து நடிகையின் பதிவுக்கு ரசிகர்கள் கமெண்ட்! 

பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளடேலா ரிஷப் பந்த் விபத்து குறித்து பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. 

Updated On : 31 டிசம்பர் 2022, 11:46 am IST
பகிர்:

பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளடேலா, 2013 முதல் பாலிவுட்டில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான லெஜண்ட் என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரெளடேலா முன்பு சூசகமாகத் தெரிவித்திருந்தார். இதனை மறுத்த ரிஷப் பந்த், சமூகவலைத்தளங்களில் ஊர்வசியை பிளாக் செய்தார். எனினும் இருவருக்கும் இடையிலான ஆன்லைன் மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது. 

இந்திய கிரிக்கெட் வீரா் ரிஷப் பந்த் வெள்ளிக்கிழமை நோ்ந்த காா் விபத்தில் பலத்த காயமடைந்தாா். உத்தரகண்ட் மாநிலம் ரூா்கியில் உள்ள தனது தாயை பாா்க்க தில்லியில் இருந்து ரிஷப் பந்த் வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் சென்றாா். அந்த மாநிலத்தின் மங்லெளா் பகுதி வழியாக சென்றபோது எதிா்பாராதவிதமாக ரிஷப் பந்தின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலை தடுப்பில் மிக வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. அவா் உறங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நடிகை ஊர்வசி அவருடைய பிறந்தநாளுக்கும் பெயர் தெரிவிக்காமல் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் இதற்கும்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயர் தெரிவிக்காமல், “பிரார்த்தனை செய்யுங்கள்” எனவும், காதல் என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவுக்கு, “உண்மையான காதல் இது இல்லையென்றால் வேறென்ன” என ரசிகர்கள் ஆதர்வு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments