எச்.வினோத்-ன் அடுத்த படத்திற்கு நாயகன் இவரா?
இயக்குநர் எச்.வினோத் இயக்கும் அடுத்த படத்தின் நாயகன் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் எச்.வினோத் இயக்கும் அடுத்த படத்தின் நாயகன் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில், இயக்குநர் எச்.வினோத் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.