FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம்!

ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறித்து...

14 அக்டோபர் 2026, 6:44 pm IST
- கோப்புப்படம்
பகிர்:

ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்க மத்திய அமைச்சரவை இன்று (அக். 14) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தீபாவளி போனஸானது சுமார் 11.40 லட்சம் ரயில்வே பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் தண்ட​வாளப் பராமரிப்​பாளர்​கள், ஓட்​டுநர்​கள், கார்​டு​கள், ஸ்டேஷன் மாஸ்​டர்​கள், மேற்​பார்​வையாளர்கள், தொழில்​நுட்ப ஊழியர்​கள் மற்​றும் உதவி​யாளர்கள் மற்​றும் இதர சி பிரிவு பணியாளர்கள் போன்றோர் அடங்குவர்.

இதற்காக ரூ. 2,009 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகுதிவாய்ந்த ஒரு ரயில்வே ஊழியருக்கு அதிகபட்சத் தொகையாக ரூ. 17,951 வழங்கப்படும்.

Advertisement

Advertisement

2025-26 ஆம் ஆண்டில் ரயில்வே துறை 167 கோடி டன் சரக்குகளைக் கையாண்டுள்ளதாகவும் சுமார் 741 கோடி பயணிகள் ரயில்களில் பயணித்ததாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் பணியாற்றிய இந்த ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக இந்த போனஸ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

summary

The Union Cabinet approved the payment of 78 days' wages as a Diwali bonus to railway employees today (Oct. 14).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments