பவன் கல்யாண் மீது வழக்கு பதிவு!
பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தனது காரின் மேற்கூறையில் அமர்ந்து பயணித்த விவகாரத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தனது காரின் மேற்கூறையில் அமர்ந்து பயணித்த விவகாரத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜனசேனா கட்சி என்பது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது மார்ச் 2014இல் பவன் கல்யாணால் உருவாக்கப்பட்டது. ஜனசேனா என்பதற்கு தெலுங்கு மொழியில் மக்கள் இராணுவம்.
தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் சனிக்கிழமை ஆந்திராவின் குண்டூரில் உள்ள இப்படம் எனும் கிராமத்தை எப்படி அடைந்தார் என்ற விடியோ சமீபத்தில் வைரலானது. பவன் கல்யாண் தனது காரின் மேற்கூறையில் அமர்ந்திருப்பதை அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஓடும் காரின் ஓரத்தில் தொங்குவதைக் காணலாம். பவன் கல்யாணின் பின்னால் இருந்த காரில் மேலே அமர்ந்து பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்தவர்கள் இருந்தனர். ஆதரவாளர்கள் சிலர் இரு சக்கர வாகனங்களில் சென்றனர். மேலும் ஒருவர் காரில் தொங்கிக்கொண்டு அவரை விடியோ எடுத்துக்கொண்டு சென்றார்.
Advertisement
Advertisement
அவர் வேகமாக கார் ஓட்டி சென்றதால் பைக்கில் சென்ற சிவக்குமார் என்பவர் கீழே விழுந்ததாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரினைப் பெற்ற காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.