முகப்பு
செய்திகள்

ஜெயிலர் படத்தின் ஜுஜுபி பாடல் வெளியானது!

ஜெயிலர் படத்தின் 3வது பாடல் ‘ஜுஜுபி ’ வெளியாகியுள்ளது.

Updated On : 26 ஜூலை 2023, 6:49 pm IST
பகிர்:

ஜெயிலர் படத்தின் 3வது பாடல் ‘ஜுஜுபி ’ வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் வில்லனாகவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

Advertisement

இப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் இணையத்தில் வைரலான நிலையில், ஹுக்கும் எனத் தொடங்கும் 2வது பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆதரவினை பெற்று வருகிறது. 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் நாள் வெளியாக உள்ள நிலையில், 3வது பாடலான களவாணி கண்ணய்யா எனத் தொடங்கும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சூப்பர் சுப்பு எழுதியுள்ள இப்பாடலை பாடகி தீ பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.