கவனம் ஈர்க்கும் சேரனின் தமிழ்க்குடிமகன் டீசர்!
இயக்குநர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்க்குடிமகன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘ஆட்டோகிராப்’ படத்தின் மூலம் மக்களின் மத்தியில் கவனம் பெற்ற இயக்குநர் நடிகருமான சேரன் பிறந்தநாளில் அவரது ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் போஸ்டர் வெளியானது. லக்ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பகிரி’, ‘பெட்டிக்கடை’ படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சாம் சி.எஸ். இசையில் இப்படம் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: வைரலாகும் சிவகார்த்திகேயனின் சிக்ஸ் பேக் புகைப்படம்?
முதல் பார்வை போஸ்டரை பகிர்ந்து இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்திருந்தார். பல்வேறு திரைப்பிரபலங்களும் இந்த போஸ்டரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் பிரபலங்களுக்கு மத்தியில் துப்புரவு பணியாளர்கள் இந்தப் போஸ்டரை வெளியிட்டது வித்தியாசமான அணுகுமுறையாக இருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆகஸ்டு 14 அன்று சென்னை கமலா திரையரங்கில் பாடல் மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.