FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சித்த போட்டியாளர்: வைரல் விடியோ!

போட்டியாளர் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து  சுவர் ஏறி வெளியேற தப்பிக்க முயற்சித்துள்ள விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

Updated On : 13 டிசம்பர் 2023, 3:04 pm IST
பகிர்:

போட்டியாளர் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து  சுவர் ஏறி வெளியேற தப்பிக்க முயற்சித்துள்ள விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 10-வது வாரத்தை எட்டியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 7-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். முதலில் 18 போட்டியாளர்களும், பின்னர் வைல்டுகார்டு போட்டியாளர்களாக 5 பேரும் பங்கேற்றனர்.

இவர்களில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் இருந்து இருவர் மீண்டும் வைல்டு கார்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இதுவரை 12 பேர் பிக் பாஸைவிட்டு வெளியேறியுள்ளனர்.

Advertisement

Advertisement

சில நாள்களாக கூல் சுரேஷ் வீட்டு ஞாபகமாகவே இருக்கிறது. வீட்டில் சொல்லாமல் வந்துவிட்டேன் என்று புலம்பி கொண்டு இருக்கிறார். இதனால் சக போட்டியாளர்களை தன்னை நாமினேட் செய்யும் படி கூல் சுரேஷ் கேட்டுகொண்டு இருந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்துள்ளார் கூல் சுரேஷ். இதனை பார்த்த இந்த வார கேப்டனான மணிசந்திரா தடுத்து நிறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, எதற்காக இப்படி செய்றீங்க என்று கூல் சுரேஷிடம் பிக் பாஸ் கேட்டுள்ளார். நன்றாக விளையாடி வெற்றியோடு வீடு திரும்ப வேண்டும் என்று பிக் பாஸ் ஆலோசனை கூறியுள்ளார். 

இந்நிலையில், கூல் சுரேஷ் சமாதானம் ஆகியிருக்கிறார். இந்த சம்பவம் 24 மணி நேரலையில் ஒளிபரப்பாகி இருக்கிறது. தற்போது, கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து  வெளியேற முயற்சிக்கும் விடியோ வைரலாகியுள்ளது.
 

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளர் பரணி, இதேபோல் பிக் பாஸ் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments