முகப்பு
செய்திகள்

‘காலம் தப்பி பிறந்துவிட்டேன்; இருந்தாலும் சம்யுக்தாவை காதலிக்கிறேன்’- இயக்குநர் பாரதிராஜா! 

வாத்தி இசை வெளியீட்டு விழாவில் நடிகை சம்யுக்தாவை காதலிப்பதாக  பாரதிராஜா கூறியுள்ளார். 

Updated On : 14 பிப்ரவரி 2023, 9:52 pm IST
பகிர்:

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

நடிகை சம்யுக்தா மலையாளத்தில் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் களரி படத்தில் அறிமுகமாயிருந்தார். 

Advertisement

Advertisement

'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. பிப்.4ஆம் தேதி இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா பேசியதாவது: 

வயதில் சிறியவர்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் தனுஷ், ஜி.வி.காலில் விழுவேன். ஜி.வி. பிரகாஷ் கடவுளின் குழந்தை. தனுஷ் சிறந்த கலைஞன் மற்றும் நல்ல மனிதன். சம்யுக்தாவை பார்க்கும் போதெல்லாம் காதலிக்க தோன்றுகிறது. கடலோர கவிதைகள் படத்தில் ஒரு டீச்சரை அறிமுகப்படுத்தினேன். இப்போது சம்யுக்தாவை பார்க்கும்போது காலம் தப்பி பிறந்து விட்டோனோ என தோன்றுகிறது. அவரை காதலிக்காமல் இருக்கவில்லை. இருந்தாலும் இப்போதும் சம்யுக்தாவை காதலிக்கிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments