’துணிவு’ உலகளவில் புதிய சாதனை
'துணிவு’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.
'துணிவு’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் குமார் இணைந்த மூன்றாவது திரைப்படமான துணிவு பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ‘காலம் தப்பி பிறந்துவிட்டேன்; இருந்தாலும் சம்யுக்தாவை காதலிக்கிறேன்’- இயக்குநர் பாரதிராஜா!
மேலும், இப்படம் பிப்.8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இந்நிலையில், துணிவு தமிழ், ஹிந்தி ஆகியவை நெட்பிளிக்ஸில் உலகளவில் ஆங்கில மொழி அல்லாத பிரிவில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.