முகப்பு
செய்திகள்

குக் வித் கோமாளி வரலாற்றில் முதல் முறையாக நடந்த நிகழ்வு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.

Updated On : 31 ஜூலை 2023, 12:54 pm IST
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்று இருந்தனர். ரக்சன், மணிமேகலை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

கோமாளிகளாக புகழ், சுனிதா, தங்கதுரை, சிங்கபூர் தீபன், பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா ஆகியோர் பங்கேற்று வந்தனர்.

Advertisement

Advertisement

குக்குகளில் கிஷோர் ராஜ்குமார், ராஜ ஐயப்பா, விஜே விஷால், காளையன், ஷெரின், கஜேஷ் வெளியேறிய நிலையில், சிவாங்கி, விசித்ரா, மைம் கோபி, சுருஸ்டி, கிரண், ஆன்ட்ரியன்  ஆகியோர் இறுதிப் போட்டிக்கு சென்றனர்.

நேற்று(ஜூலை 30) நடந்த இறுதிப் போட்டியில் மைம் கோபி முதலிடத்தையும், சுருஸ்டி இரண்டாம் இடத்தையும், விசித்ரா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

குக் வித் கோமாளி வரலாற்றில் முதல் முறையாக ஆண் போட்டியாளர் ஒருவர் இறுதிப் போட்டியை வென்றுள்ளார். கடந்த சீசன்களில் பெண் போட்டியாளர்கள் வென்ற நிலையில், இந்த சீசனில் மைப் கோபி முதலிடத்தைப் பெற்றார்.

இது குறித்து மைம் கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜெயிட்டோம் தம்பிகளா, ஆதரித்த அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளரான சிவாங்கிக்கு எந்த பரிசும் கிடைக்கவில்லை. கடந்த சீசன்களில் கோமாளியாக பங்கேற்ற சிவாங்கி, இந்த சீசனில் குக்காக பங்கேற்றார். இதனால் அடுத்த சீசனில் சிவாங்கி பங்கேற்க முடியாதது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.