FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காக்கா...கழுகு...: விஜய்யின் குட்டி ஸ்டோரி! 

லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் காக்கா, கழுகு வைத்து ஒரு குட்டி கதை சொல்லியிருக்கிறார். 

Updated On : 2 நவம்பர் 2023, 3:16 am IST
படம்: எக்ஸ்
பகிர்:

லியோ திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக இந்த வெற்றி விழா நடைபெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கிய சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதையை ஒப்பிட்டு நான்தான் நம்பர்.1 எனப் பேசியிருப்பார். லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் வெற்றி விழாவில் இது குறித்து நடிகர் விஜய் பேசியுள்ளார். 

விஜய் கூறிய குட்டி ஸ்டோரி: 

Advertisement

Advertisement

ஒரு காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு செல்கிறார்கள். அந்தக் காட்டில் யானை, சிங்கம், புலி, காக்கா, கழுகு...அதான்பா காக்கா, கழுகு... காடு என்றால் இதெல்லாம் இருக்கும் இல்லையா.. (மக்கள் ஆர்பரித்தார்கள். சிரித்துக் கொண்டே சிறிது இடைவெளிவிட்டு தொடர்கிறார்). அதில் இருவரில் ஒருவர் வில் அம்பு, இன்னொருவர் ஈட்டியையும் கொண்டு செல்கிறார். அம்பு கொண்டு சென்றவர் ஒரு முயலை அடித்து தூக்கிவிட்டார். ஈட்டி கொண்டு சென்றவர் யானையை கொல்ல முயற்சித்து முயற்சித்து தோல்வி அடைவார். இதில் யார் வெற்றியாளர்?. எது கெத்து? எளிதாக அடைய முடிவதை அடைவதில் என்ன இருக்கிறது. எது கடினமோ அதை முயன்று வெல்வதில்தான் முக்கியம். போட்டி இடுவதே வெற்றிதான். 

பாரதியார் சொன்னதுபோல பெரிதுனும் பெரிது கேள். சிறிய ஆசைகள் குற்றம் என்கிறார்கள். அதனால் பெரிதாக ஆசைப்படுங்கள். எதுவும் தவறில்லை. 

எனது ரசிகர்கள் முட்டாள்கள் இல்லை. சினிமாவை சினிமாவாக பார்க்கிறார்கள். உலகம் முழுவதும் அப்படித்தான்.  நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள். கெட்டதை விட்டுவிடுங்கள். எனது ரசிகர்களும் அப்படித்தான். எதை எடுப்பது எதை விடுவது என எனது ரசிகர்களுக்கு தெரியும். அவர்கள் வேற ரகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments