FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 வருமா? முட்டுக்கட்டையாக 2 நடிகர்கள்!

2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது.

Updated On : 2 செப்டம்பர் 2023, 7:48 pm IST
பகிர்:

 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடியவுள்ள நிலையில், விரைவில் அதற்கான இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளில் தொலைக்காட்சி நிறுவனம் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். 

2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. இதனால், நீண்ட நாள்கள் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது. 

Advertisement

Advertisement

4 சகோதர்கள் திருமணத்துக்கு பிறகும் கூட்டுக்குடும்பமாக இணைந்துவாழும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், சவால்கள்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை.

தற்போது நான்கு சகோதர்களுக்கும் குழந்தை பிறந்து தனித்தனி குடும்பமான நிலையில், தொடரை முடித்துவிட்டு 2ஆம் பாகம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ஆம் பாகத்தில் குழந்தைகள் வளர்ந்த பின்பு நடக்கும் கதையாக இருக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ஆம் பாகத்தில் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் நடிகை சுஜிதா, குமரன் தங்கராஜ் ஆகியோர் நடிக்க மறுத்துள்ளதாகத் தெரிகிறது. 

நடிகை சுஜிதா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று நடிகர் குமரன் தங்கராஜுக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிக அளவில் குவிவதால் சின்னத்திரை தொடரில் நடிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் 2ஆம் பாகத்தில் முதல் பாகத்தின் நடிகர்களே பெரும்பாலும் நடிப்பது வழக்கம். அதேபோல இந்தத் தொடரிலும் சுஜிதா, குமரன் ஆகியோ நடித்தால், சிறப்பாக அமையும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments