6-வது நாள்.. ரூ.621 கோடி வசூல்.. மிரட்டும் பாலிவுட் பாட்ஷா!
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலுமே படத்தின் வசூலுக்கு பாதிப்பில்லை. ஜெட் வேகத்தில் வசூலித்து வருகிறது ஜவான்.
இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.129.6 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அசோக் செல்வன் திருமணம்: வைரலாகும் பசுமை விருந்து பட்டியல்!
இறுதியாக, உலகம் முழுவதும் 5 ஆம் நாள் முடிவில் ரூ. 574.89 கோடி வசூலித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், ஜவான் 6-வது நாள் முடிவில் உலகளவில் ரூ.621.12 கோடியை வசூலித்துள்ளதாக இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி வசூல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் ஜவான், இன்னும் சில நாள்களில் ரூ.1,000 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.