கல்கி 2898 ஏடி படத்தின் புதிய டீசர்!
கல்கி 2898 ஏடி படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இது பிரபாஸின் 23வது படம். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார்.
ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்தப் படம் வைஜெயந்தி மூவிஸின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் மே 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
முன்னதாக 'கல்கி 2898 ஏடி' படத்தில் நடிகர் பிரபாஸின் பெயர் பைரவா எனக் குறிப்பிட்டு படக்குழு போஸ்டரை வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில், அமிசாப் பச்சனின் பாத்திரத்தை தெரிவிக்கும் வகையில் புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் நடிகர் அமிசாப் பச்சன் அஷ்வத்தாமா என்ற பாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது, இப்படத்தின் புதிய டீசர் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.