வணங்கான் தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு! ரிலீஸ் எப்போது?
இயக்குநர் பாலா இயக்கிய வணங்கான் திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாலா இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. அதிரடியான சண்டைக்காட்சிகளும் வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
தொடக்கத்தில் இதில் சூர்யா நடிக்கவிருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இதிலிருந்து விலகிய சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்தப் படம் செப்டம்பர் மாதம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.