சூர்யா 44: முதல்கட்ட படப்பிடிப்பு அப்டேட்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கியுள்ளது.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஷ் கிருஷ்ணா, கலை இயக்குநர் ஜாக்கி, எடிட்டர் ஷபீக் முகமது அலி, சண்டைப் பயிற்சியாளர் கேச்சா கம்பக்டீ இப்படத்தில் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
Advertisement
Advertisement
அந்தமானில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவுக்கான 2 பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் சில சண்டைக்காட்சிகளும் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.