முகப்பு
செய்திகள்

இதுவரை பார்க்காத ரஜினியை ‘தலைவர் 171’ படத்தில் பார்க்கலாம்: லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினி 171 படம் குறித்து பேசியுள்ளார்.

Updated On : 30 மார்ச் 2024, 3:18 pm IST
பகிர்:

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றிப்படமானது.

தற்போது, லோகேஷ் கனகராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். 

Advertisement

Advertisement

சமீபத்தில் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டது. அதில் ஏப்.22ஆம் தேதி படத் தலைப்பின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் விருது வழங்கும் விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இதுவும் 100 சதவிகிதம் லோகேஷ் படம்தான். இதுவரை பார்க்காத ரஜினியை இதில் பார்க்கலாம். அதற்காகத்தான் உழைத்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments