ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் திரைப்படமாகும் வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாறு!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாற்றினை படமாக்குகிறார் அறிமுக இயக்குநர்.
வீரமங்கை வேலு நாச்சியார் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப் பெண்மணி. 'கொரில்லா' போர்முறையை முதன்முதலாக சோதித்துப் பார்த்தவர். தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்படுபவர். 18-ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட மகாராணி.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாற்றினை படமாக்குகிறார் அறிமுக இயக்குநர் அரவிந்த ராஜ்.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!
Advertisement
Advertisement
டிரெண்ட்ஸ் சினிமாஸ் சார்பாக தயாரிக்கும் இந்தப் படத்தில் வேலு நாச்சியாராக நடிக்கிறார் அறிமுக நடிகை ஆயிஷா நடிக்கவிருக்கிறார். மற்ற விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்குமெனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தெலுங்கு நடிகர்கள் எனக்கு வாய்ப்பு வழங்குவதில்லை: புலம்பும் இசையமைப்பாளர் மணி சர்மா!
மேலும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குமெனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.